5 Most Dangerous Female Serial Killers in the World | Reva Leaks

உலகின் மிகவும் ஆபத்தான 5 பெண் சீரியல் கில்லர்கள் –

பெண்கள் என்றாலே அன்பானவர்கள், பாசமானவர்கள், இளகிய மனம் கொண்டவர்கள் என்ற சொல்லுக்கு எதிர்மறையாக இந்த உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய சில கொடூரமான குணங்கள் கொண்ட மற்றும்  படுபயங்கரமாக குழந்தைகளை கொன்ற உலகின் 5 பெண் சீரியல் கில்லர்களை பற்றி தான் பார்க்க போகிறோம்.

Gertrude Baniszewski – (கெர்ட்ரூட் பானிஸ்ஜெவ்ஸ்கி) உலகத்தில் மிக கொடூரமான தாய் என்ற பெயர் பெற்றவர் இவர் தான். இந்தியானாவை சேர்ந்த இந்த விவாகரத்து பெற்ற ஜெட்ரோ தனது சொந்த மகளையே அதிகபடியான சித்திரவதைக்கு உட்படுத்திய கொடூரமான தாய். சிளிவிய என்ற இவரது மக்களின் இறப்பிற்கு பிறகு தான் இவர் கொடூரமான மனநிலையை தனது சொந்தப் பிள்ளைகள் மீது வைத்துள்ளார் என்பது இந்த உலகிற்கு தெரியவந்தது. 1965ல் நடந்த அந்த முதல் கொலை வழக்கு இன்று வரையில் இந்தியானாவில் “the single worst crime against an individual in Indiana’s history” அதாவது ( இந்தியானா வரலாற்றில் ஒரு தனிநபருக்கு எதிராக செய்யப்பட்ட மிக மோசமான குற்றம்) என்ற பெயரில் பிரபலமாக இருக்கிறது.

Dagmar Overbye – டாக்மர் ஓவர்பை – இவர் Danish serial killer இவர் 25 சிறுவர்களை கொன்றுள்ளார். இதுல திகிலான விஷயம் என்னனா இவரோட சொந்த குழந்தையும் கொன்றுள்ளார். 1913 இல் இருந்து 1920 குள் இவர் இத்தன கொலைகளும் செய்துள்ளார். குழந்தைகளை பாதுகாக்கும் வேலை செய்து வந்தவர் இவர். குழந்தைகளை கொடுமை படுத்தி கொலை செய்து வந்த இவருக்கு 1921இல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 1929இல் Dagmar தனது 42வது வயதில் இறந்து போனார்.

Christiana Edmunds – கிறிஸ்டினா எட்மான்ஸ் – கிறிஸ்டினா சாக்லேட் கிரீம் killer என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தார். ஆங்கிலேயே serial killer-ஆனா இவர் ஒரு மன நோயாளி ஆவார். இவர் கடைகளில் சாக்லேட் வாங்கி வந்து அதில் விஷம் கலந்து மீண்டும் அதை கடைகளிலேயே கொடுத்துவிடுவார். அந்த சாக்லேட்டை வாங்கி சாப்பிடும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இறந்துவிடுவார்கள். இந்த சம்பவம் 1871- ல் 4 வயது சிறுவன் இறந்த போது தான் கண்டுபிடிக்கப்பட்டது இவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. பிறகு இவருக்கு மன நோய் இருப்பதால் வாழ்நாள் சிறை தண்டனை மட்டும் அளித்தனர்.

Catherine de’ Medici – கேத்தரின் டி மெடிசி – ஐரோப்பியவில் வாழ்ந்த ஒரு சக்தி வாய்ந்த மனித தன்மையற்ற பெண். இவர் பிரான்ஸ் நாட்டின் ராணி யாக இருந்தவர். இவர் 30 ஆயரம் பேரின் உயிரை பறித்த கொடூரமான பெண்.

Tillie Klimek – டில்லி கிளிமேக் – இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் அமெரிக்காவை கலக்கிய சிக்காகோவை சேர்ந்த மிக பெரிய serial killer. இவர் ஒரு சைக்கோ இவர் தனது கனவில் வரும் நபர்களின் மரண தேதியை தீர்மானித்து வந்தார். 1912 ல் இருந்து 1923 வரை இவர் 20க்கும் மேற்பட்ட நபர்களை விஷம் கொடுத்து கொன்றுள்ளார். சிலர் இவரிடம் இருந்து தப்பியுள்ளனர் பலர் இறந்துள்ளனர் இதில் இவருடைய நான்கு கணவர்களும் அடங்கும். இதனால் இவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை 1923-ல் வழங்கப்பட்டது. தனது அறுபதாவது வயதில் இவர் சிறையிலேயே காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *