The 15 Greatest Mysteries Unknown To The World | Reva Leaks

உலகில் இன்றுவரை விடைதெரியாத 15 மாபெரும் மர்மங்கள் | The 15 Greatest Mysteries Unknown To The World

புகைப்படங்கள் எடுப்பது நாம் அனைவருக்கும் பிடிக்கும் புகைப்படங்கள் நமக்கு இனிய பழைய நினைவுகளை தரும் ஆனால் அதில் ஒரு சில புகைப்படங்களில் மர்மமான விஷயங்கள் எதிர்பாராமல் பதிவாகி இன்று வரை யாராலும் விளக்கம் தர முடியாத நிலையில் உள்ள 15 உண்மை புகைப் படங்களைப் பற்றி தான் பார்க்க போறோம்.

Real Annabelle 2014 ஆம் ஆண்டு வெளிவந்த Annabelle ஆங்கிலத்திரைப்படத்தை பலரும் பார்த்திருப்போம் ஆனா இந்த திரைப்படமானது Annabelle என்ற உண்மையான பொம்மையின் கதையை தழுவி எடுக்கப்பட்டது என உங்களுக்கு தெரியுமா அதாவது 1970 ம் ஆண்டு தோனோ என்ற தன்னுடைய மகளின் பிறந்தநாள் பரிசாக அவரது அம்மா வாங்கிக் கொடுத்த அன்பளிப்பு தான் இந்த உண்மை Annabelle. எனவே இந்த பொம்மையை வீட்டிற்கு கொண்டு வந்த சில நாட்களிலேயே தானாக நகர ஆரம்பித்தது. இரவில் சிவப்பு நிறத்தில் ஒளிரவும் செய்தது. குழந்தைகளின் கனவில் தோன்றி பயமுறுத்தவும் செய்துள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த Annabelle பொம்மையை ஏதாவது ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டாலும் சில மணி நேரத்தில் வேறொரு அறையில் தென்படும் இவ்வாறு பல அமானுஷ்ய நிகழ்வுகள் அந்த வீட்டில் இந்த பொம்மையின் மூலமாக தொடர்ந்து நடந்து உள்ளது இதனால் இந்த பொம்மையை அங்குள்ள அருங்காட்சியகத்தில் எச்சரிக்கையுடன் கூடிய அறையில் வைத்து நிரந்தரமாக அடைத்து விட்டனர் அவ்வாறு இன்று வரை அடைத்து வைக்கப்பட்டுள்ள இந்த பொம்மையானது ஏன் இப்படி விநோதமாக நடந்து கொண்டது என்பதற்கு யாரிடமும் முறையான விளக்கம் இல்லை

Babushka Lady 1963 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக ஜான் எஃப் கென்னடி படுகொலை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவில் மூலம் அடையாளம் தெரியாத ஒருவர் அதிபதி கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டார். அதன் பிறகு FBI அவரைப் பற்றி விசாரணை மேற்கொள்ளும் போது அந்தப் பெண்ணைப் பற்றிய எந்தவொரு அடையாளங்களும் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

மிஸ்டரியஸ் போர்ட் 2014 ஆம் ஆண்டு மார்ட்டின் என்பவர் அவரது நான்கு வயது குழந்தையுடன் ஜப்பானில் உள்ள கடற்கரைக்கு சென்று சில புகைப்படங்களை எடுத்துள்ளார் பிறகு அன்று இரவு வீட்டிற்கு வந்து அந்த புகைப்படங்களை கணினியில் பதிவேற்றம் ஒவ்வொன்றாக பார்த்துள்ளார் அப்போது ஒரு புகைப்படத்தில் மட்டும் குழந்தைக்கு பின்னால் யாரோ நிற்பது போல கருப்பு நிற கால்கள் பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் ஏனென்றால் அவர் புகைப்படம் எடுத்த போது அப்பகுதியில் ஒருவர் கூட இல்லையாம் மேலும் இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய சில மணி நேரத்திற்குள் வைரலாகியுள்ளது இந்த புகைப்படம் போலியாக சித்தரிக்கப்பட்டது என சிலர் குற்றம் சாட்டினாலும் புகைப்படத்தை ஆராய்ந்த வல்லுநர்கள் இது உண்மையான புகைப்படம் என்பதை உறுதி செய்துள்ளனர் இந்த புகைப்படத்தில் இருப்பது என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது

Hessdalen Lights நார்வேயில் ஒரு பள்ளத்தாக்கில் ஆண்டு முழுவதுமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒரு வினோதமான வெளிச்சமானது தென்படுகிறது இந்த வினோதமான நிகழ்வைப் பற்றி பலரும் ஆராய்ச்சி செய்தனர். ஆனால் இன்றுவரை ஆராய்ச்சியாளர்களால் அந்த வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதற்கான காரணத்தை கூற முடியவில்லை.

Hook Island Sea Monster ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த தீவு மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் 1964இல் ராபர்ட் என்பவர் தனது குடும்பத்துடன் போட்டிங் செல்லும்போது ஒரு பெரிய உயிரினத்தை கடலில் பார்த்தார் அது மிகப் பெரியதாகவும் அதன் நீளம் சுமார் 80 அடி வரை இருந்ததாகவும் மேலும் அதன் தலைப்பகுதியில் கண்கள் இருந்ததாகவும் கூறினார் ஆனால் இவர் கூறியதை மேரி என்பவர் 1984இல் அந்த தீவுக்கு சென்று அதே உயிரினத்தைப் பார்த்து புகைப்படம் எடுத்துக் காண்பிக்கும் வரை யாரும் நம்பவில்லை மேலும் அந்த புகைப்படம் போலியானது என்று கூறப்பட்டது ஆனால் அந்த புகைப்படம் முற்றிலும் உண்மையானது என நிபுணர்கள் கூறினர் மேலும் அந்தப் புகைப்படம் மிகவும் தெளிவாகவும் இருந்தது

Solway Firth Spacemen 1964 ஆம் ஆண்டு ஒருவர் தனது மகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது அவரது மகளின் பின்னால் விண்வெளி வீரர் திடீரென நின்று கொண்டிருப்பதைப் போல் ஒரு புகைப்படம் பதிவாகியுள்ளது அவர் Photo எடுத்துக் கொண்டிருந்த போது அங்கு வேறு யாருமே இல்லை என்றும் தனது மகன் மட்டுமே இருந்தால் என்றும் அவர் கூறியுள்ளார் அந்த புகைப்படத்தை ஆய்வு செய்த Kotak கம்பெனியும் அந்த புகைப்படமானது எந்த வகையிலும் Edit செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

Ghost in Photo இந்த புகைப்படத்தில் கொஞ்சம் கவனமாகப் பார்த்தால் சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் இரண்டு பெண்களுக்கு நடுவில் மூன்றாவதாக ஒரு பயங்கரமான உருவம் இருப்பதை நீங்கள் பார்க்கலாம் அந்த 3வது உருவம் என்று இன்றும் விடை தெரியாத மர்மமாகவே உள்ளது

Old Track Photo கலிபோர்னியாவில் காவல்துறை பணியாளராக உள்ள ரா என்பவருக்கு புகைப்படங்கள் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது எனவே ஒருநாள் காடுகளுக்குள் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பழைய லாரிகளை புகைப்படங்கள் எடுத்துள்ளார் பிறகு வீட்டிற்கு வந்து அந்த புகைப்படங்களை உன்னிப்பாக பார்த்தபோதுதான் ஒரு புகைப்படத்தில் மட்டும் வித்தியாசமான உருவம் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது குறிப்பாக லாரியின் இடதுபுறத்தில் தென்படும் அந்த உருவமானது ஒரு பெண்ணின் முகம் ஒன்று இருந்துள்ளது ஆனால் அந்தப் படத்தை எடுக்கும்போது லாரியில் யாரும் இல்லை என உறுதியாகக் கூறுகிறார் மேலும் இவர் காவல்துறையில் பணியாற்றுவதால் அங்குள்ள புலனாய்வு வல்லுனர்களிடம் இந்த புகைப்படத்தை ஆய்வு செய்வதற்காக கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்தை  ஆய்வு செய்தவர்கள் இது உண்மையான புகைப்படம் என்பதை உறுதி செய்ததுடன் அதில் தெரிவது பெண்ணின் உருவம் என்பதையும் கண்டறிந்துள்ளனர் எனவே இந்த புகைப்படமும் விளக்கமுடியாத மர்மங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது

SS WaterTown Ghosts 1924 ஆம் ஆண்டு ஒரு கொடூரமான கப்பல் விபத்தில் இரண்டு மாலுமிகள் உயிரிழந்தனர் அதன் பிறகு அந்த கப்பலில் பயணம் செய்தவர்கள் தங்களை இரண்டு உருவங்கள் பின் தொடர்ந்து வருவதாக கூறினர். அப்போது அந்த கப்பலின் கேப்டன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார் அந்த புகைப்படத்தில் இரண்டு முகங்கள் அலைகளில் இருப்பதைப்போல உருவங்கள் ஆனது பதிவாகியுள்ளது

Black Knight Satellite 1960 ஆம் ஆண்டு ஒரு அடையாளம் தெரியாத கருமை நிறம் கொண்ட வேற்றுகிரக பொருளானது பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருவதாக செய்திகள் வெளியாகின அந்த காலகட்டத்தில் எந்த ஒரு செயற்கைகோளும் மனிதனால் விண்வெளியில் செலுத்தப்படும் இல்லை அந்த பொருளானது பார்ப்பதற்கு மனிதனால் உருவாக்கப் பட்டதே இல்லை அதன்பின் ஆனாலும் அந்த மர்ம பொருளால் ஆனது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது இந்த மர்மமான பொருளால் ஆனது சில மணி நேரம் மட்டுமே தெரிவதாகவும் பிறகு பார்வையிலிருந்து மறைந்து விடுவதாகவும் கூறப்படுகிறது

Mirror Photo இந்த புகைப்படத்தில் சாதாரணமாக புன்சிரிப்புடன் போஸ் கொடுக்கும் அந்த சிறுமியின் உருவம் கண்ணாடியில் மிகவும் சந்தோஷமாக வாய்விட்டு சிரிப்பது காணப்படுகிறது ஆனால் நிஜத்தில் அந்த சிறுமி சாதாரணமாகத் தான் இருக்கிறார் பொதுவாக கண்ணாடி இருப்பதைத்தான் பிரதிபலிக்கும் ஆனால் அதற்கு விதிவிலக்காக இந்த புகைப்படம் அமைந்துள்ளது

Cupper Family Photo இந்த புகைப்படமானது 1949 ஆம் ஆண்டு Cupper என்ற குடும்பத்தினர் புதிதாக வாங்கிய வீட்டில் குடி பெயர்ந்த போது எடுக்கப்பட்டது இந்த புகைப்படம் எடுக்கும்போது இரண்டு குழந்தைகளும் குழந்தையின் அம்மா மற்றும் பாட்டி மட்டுமே இருந்துள்ளனர் ஆனால் நான்கு பேருடன் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் பார்த்த போது புகை மாதிரியான ஐந்தாவது மனித உருவம் ஒன்று தலைகிழாக பதிவாகியிருந்தாம் இந்த மர்ம புகைப்படம் இருபதாம் நூற்றாண்டில் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் 2009 ஆம் ஆண்டு இணையத்தில் வெளியான பின்பு பலரால் பேசப்பட்டது 70 ஆண்டுகள் பழமையான இந்த புகைப்படத்தில் இருப்பது இதற்கு முன்னால் இந்த வீட்டில் வசித்து இறந்து போனவரின் ஆன்மா என்ற ஒரு வதந்தியும் நிலவி வருகிறது இருப்பினும் 100% உண்மை என்று நிரூபிக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் இருப்பது என்னவென்று புகைப்படம் வல்லுனர்களால் கூட இன்னும் கண்டறிய முடியவில்லை.

Geo Phone Rock Anomaly  இந்த புகைப்படமானது அப்போலோ -17-னின் நிலவின் கடைசியாக பயணிக்கும்போது எடுக்கப்பட்டுள்ளது சரியான வெளிச்சம் இல்லாத காரணத்தால் இந்த புகைப்படம் சரியாக எடுக்கப் படவில்லை ஆனால் காண்ட்ராஸ்ட் அட்ஜஸ்ட் செய்து பார்த்தபோது நிலவில்  ஒரு பிரமிடு போன்ற கட்டமைப்பு காணப்பட்டது

Goddards Squadron Photograph இந்த புகைப்படமானது 1919 ஆம் ஆண்டு அந்த Squad Member களால் எடுக்கப்பட்டது. ஜாக்சன் என்ற ஒரு சக ராணுவ வீரரின் இறுதி சடங்கில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் ஒரு ராணுவ வீரரின் பின்னால்  ஒரு உருவமானது தெரிகிறது இது வேறு யாருமில்லை அன்று இறந்து போன ஜாக்சன்

Mystery Child Hand இந்த புகைப்படத்தை மேலோட்டமாக பார்க்கும்போது ஒரு அழகான குடும்ப புகைப்படம் போலத்தான் தெரியும் ஆனால் உற்று கவனித்தால் புகைப்படத்தில் உள்ள கடைசி குழந்தையின் மீது கூடுதலாக ஒரு சிறிய கை இருப்பது தெளிவாகத் தெரியும் குடும்பத்திலுள்ள ஒருவருடைய கையாக இது இருக்கலாம் என நீங்கள் நினைத்தால் நிச்சயமாக இல்லை ஏனென்றால் மற்ற நான்கு பேருடைய கைகளும் முழுமையாக புகைப்படத்தில் பார்க்க முடிகிறுது மேலும் இப் புகைப்படம் எடுக்கும்போது நாற்காலிக்கு பின்னால் வேறு எந்த குழந்தையும் இல்லை என்பதை அக்குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர் இந்த புகைப்படம் பொய்யாக சித்தரிக்கப்பட்டது என்பதற்கும் இதுவரை தகுந்த ஆதாரங்கள் இல்லை ஆகவே இந்த புகைப்படமும் விளக்க முடியாத மர்மங்கள் ஒன்றாக இன்று வரை தொடர்கிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *